ரயில்வே துறையில் தற்போது 2.25 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது என தெரியவந்துள்ளது.
உயர் முக்கிய பதவியான ரயில்வே வாரிய உறுப்பினர் (எலெக்ட்ரிகல்) பதவி காலியாக உள்ளது. மேலும் 4 பொது மேலாளர் (ஜி.எம்) பதவிகளும், பல்வேறு ‘மண்டல ரயில்வே மேலாளர்’ (டி.ஆர்.எம்) பதவிகளும் காலியாக இருப்பதால், பல பணிகள் முடிவு எடுக்கப்படாமல் தேங்கியுள்ளன.
ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளிலும் 2014, ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி 2 லட்சத்து 25 ஆயிரத்து 863 பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
என்றாலும் கடந்த சில ஆண்டு களில் ரயில் இயக்கும் திறன் அதிகரித்துள்ளதாகவும், பயணிகள் பாதுகாப்பில் சமரசத்துக்கு இட மில்லை என்றும் அமைச்சர் வாதிட்டார். ஆனால் ரயில்வே துறை யின் செயல்பாடுகள் தங்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்கின்றனர் அதன் ஊழியர்கள்.
ரயில் கட்டணங்களை பாஜக அரசு உயர்த்திய பிறகு ரயில் சேவை யின் தரத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவிலான காலிப் பணி யிடங்கள், உயர் மட்ட ரயில்வே துறைகளுக்கு இடையிலான மோதல் போக்கு ஆகியவற்றால் பயணிகள் சேவையை மேம்படுத் துவது தடைபட்டுள்ளதாக கூறப் படுகிறது.
இன்ஜின் டிரைவர், ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, சிக்னல் இன்ஸ் பெக்டர் மற்றும் பராமரிப்பு ஊழியர் உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்பு தொடர்புடைய பணிகள்தான் காலிப் பணியிடங்களில் பெருமள வில் உள்ளன. ரயில்வேயின் பல் வேறு துறைகள் இடையிலான மோதல் போக்கே இதுபோன்ற முக்கியப் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணமாகும்.