உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இன்று (சனிக்கிழமை) ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பாலாசூர் கடற்கரை ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
5 நிமிட இடைவெளியில் இருமுறை செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கின.
சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக ஏவுதள நிலைய இயக்குநர் எம்.கே.வி.பிரசாத் தெரிவித்துள்ளார்.
60 கிலோ எடை அளவிளான வெடிப்பொருளை சுமந்து கொண்டு 25 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன்வாய்ந்த இந்த ஏவுகணையின் தரம் மேம்படுத்தப்பட்டு அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஒடிசாவின் பாலாசோர் கடற்கரை அருகே உள்ள சந்திப்பூரில், இன்றும் ஆகாஷ் ஏவுகணை சோதனை நடைபெற்றது.