இந்தியா

அல் காய்தா வீடியோ இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான சதி: தாருல் உலூம் தியோபந்த் கண்டனம்

செய்திப்பிரிவு

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பேசியதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ, இந்திய முஸ்லிம்களைக் குற்ற வாளிகள் போலக் காட்ட அவர் களுக்கு எதிராக பின்னப்படும் சதிகளில் ஒன்று என தாரூல் உலூம் தியோபந்த் மதரஸாவின் துணை வேந்தர் முஃப்தி அபுல் காசிம் நொமானி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் தியோபந்தில் அமைந்துள்ள சன்னி முஸ்லிம்களின் செல்வாக்கு பெற்ற பழமையான மதரஸாவான தருல் உலூம், இந்த வீடியோ குறித்து நியாயமான விசாரணை செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து நொமானி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய முஸ்லிம் கள், மதச்சார்பற்ற அரசியல் சட்டம் மற்றும் நீதித் துறை மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் இத்தகைய தூண்டுதல்களுக்கு அவர்கள் இரையாக மாட்டார்கள்.

இந்த வீடியோவைப் பயன் படுத்தி மதவாத சக்திகள் முஸ்லிம் களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி அப்பாவி முஸ்லிம்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக 2008-ம் ஆண்டு தாருல் உலூம் மதரஸா பத்துவா எனும் தடையை வெளியிட்டுள்ளது” என தெரிவிக்கப்ட்டுள்ளது.

SCROLL FOR NEXT