உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் உள்ள எப்.எம் ரேடியோக்களின் நிகழ்ச்சிகளில் அம்மாநில இளைஞர் காங்கிரஸும் தீவிரமாக பங்கு கொண்டு வருகிறது. இதில், திரைப்படப் பாடல்களின் இடையே, காங்கிரஸின் கடந்த கால வரலாறு, தலைவர்கள், ஆட்சி மற்றும் அதன் முக்கியத் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக கேள்வி கள் கேட்கப்படுகின்றன.
இதற்கு பதில் அளிக்கும் முதல் பத்து நேயர்களுக்கு அந்நகரின் முக்கிய திரை அரங்குகளில் நடை பெற்று வரும் பிரபல திரைப்படங் களின் நுழைவு சீட்டுகள் இலவச மாக வழங்கப்படுகின்றன.
இது குறித்து ‘தி இந்து’விடம் உபி இளைஞர் காங்கிரஸ் வட்டாரம் கூறும்போது, “இளைஞர்கள் மத்தியில், சரிந்த காங்கிரஸின் நிலையை தூக்கி நிறுத்த இந்த நிகழ்ச்சிகள் மிகவும் உதவியாக உள்ளன. இதன் மூலம் ராகுல் காந்தியின் புகழை மீண்டும் தூக்கிப் பிடிக்க முடியும் எனக் கருதுகிறோம்.
இதன் வெற்றியை பொறுத்து நாட்டின் மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்த டெல்லியில் உள்ள தலைமை திட்டமிட்டு வருகிறது” என்றனர்.