இந்தியா

ஹரியாணாவில் முஸ்லிம் குடும்பம் மீது தாக்குதல் நடத்திய கும்பல்: 6 பேர் கைது

செய்திப்பிரிவு

ஹரியாணாவில் முஸ்லிம் குடும்பத்தை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ஹரியாணாவில் உள்ள குர்கானில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களது இல்லத்துக்கு அருகே வியாழக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.  அப்போது கும்பல் ஒன்று ஹாக்கி மட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அக்குடும்பத்தின் பெண்களும் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த சஜித் என்வர் கூறும்போது, “ குடித்துவிட்டு கும்பல் ஒன்று எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அவர்கள் எங்களை கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று கூறினார்கள்.

அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, “  நாங்கள் எங்கள் விருந்தினருக்காக உணவு செய்து கொண்டிருந்தோம். அப்போது கும்பல் ஒன்று நுழைந்து தாக்கியது.  நான் அவர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் மாடிக்குச் சென்றனர். எங்கள் ஜன்னல், கதவுகளைத் தாக்கினர்” என்றார்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து போலீஸார் தரப்பில், “இந்தத் தாக்குதலில் 20 முதல் 30 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் போன்சி பகுதியைச் சேர்ந்தவர்கள்.  நாங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT