இந்தியா

மசூத் அசார் விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும்: இந்தியாவுக்கான சீன தூதர் தகவல்

செய்திப்பிரிவு

ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும் என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றம், பதான்கோட் விமானப்படை தளம், காஷ்மீரின் உரி ராணுவ முகாம், புல்வாமா உள்ளிட்ட இடங்களில் தாக்குதலை நடத்தியது ஜெஇஎம். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு அந்நாட்டு அரசு அடைக்கலம் வழங்குகிறது. அதேநேரம் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறி விக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் ஆதரவு தெரிவித் துள்ளன. ஆனால், சீனா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி 4-வது முறையாக இந்தக் கோரிக்கையை தடுத்து நிறுத்தி உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக் கான சீன தூதர் லுவோ ஜாஹூய் நேற்று கூறும்போது, “மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்படும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT