இந்தியா

இங்கு விலைவாசி உயர்கிறது; ஜப்பானில் பிரதமர் மோடி டிரம்ஸ் வாசிக்கிறார்: ராகுல் தாக்கு

செய்திப்பிரிவு

மோடியின் 100 நாள் ஆட்சி பற்றி பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது விமர்சனங்களைத் தொடுத்துள்ளார்.

"தேர்தலின் போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி அரசு மறந்து விட்டது போலும், நான் நினைவு படுத்துகிறேன், நாட்டை மாற்றி அமைப்போம் என்றனர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றனர் ஊழலை ஒழிப்போம் என்றனர். 100 நாட்கள் முடிந்து விட்டது.

குறைந்தது இப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்குங்கள், அவர்கள் இன்னும் பணிசெய்யவே தொடங்கவில்லை என்கின்றனர் மக்கள், இங்கு மக்கள் மின்வெட்டினால் அவதிப்படுகின்றனர், விலைவாசி எகிறுகிறது. ஆனால் நம் பிரதமர் ஜப்பானில் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கிறார்”

என்று ராகுல் காந்தி அமேதியில் கூறினார்.

SCROLL FOR NEXT