மகாராஷ்டிராவில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற திடீர் பரிசோதனை குறித்து பல்கார் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பி.டி.பந்தாத், ஏஎன்ஐயிடம் தெரிவித்த விவரம்:
''பல்காரில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் இருப்பது குறித்து நேற்று மாலை எங்களுக்கு நம்பகமான துப்பு கிடைத்தது. சிறிதும் தாமதிக்காமல் அங்கு விரைந்ததால் வீட்டில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பெரிய அளவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இச்சோதனையின்போது 183 ஜெலட்டின் குச்சிகள், 103 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், 345 நான் எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 21 சேஃப்டி பியூஸ்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு பல்கார் மாவட்ட துணை காவல் கண்காப்பாளர் தெரிவித்தார்.