இந்தியா

அக்னி-1 ஏவுகணை பரிசோதனை வெற்றி

செய்திப்பிரிவு

700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கவல்ல அக்னி-1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை இன்று காலை ஒடிஸா ஏவுகணை தளத்திலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

700 கி.மீ தொலைவு இலக்கிற்கு அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-1 ஏவுகணை, வங்காள விரிகுடாவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறித்த நேரத்தில் தாக்கி அழித்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர் அவினாஷ் சந்தர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் வி.ஜி. சேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT