‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்பட ட்ரெய்லரில் தன் பெயர் இடம்பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். அதாவது தான் அந்தப் படத்துக்காக பாடல் எதையும் எழுதவில்லையே பின் எப்படி தன் பெயர் அதில் கூறப்படுகிறது என்று அவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் பிஎம் நரேந்திரமோடி படத் தயாரிப்பாளர் சந்தீப் சிங் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
பிஎம் நரேந்திர மோடி படத்துக்கான நன்றி தெரிவிப்புப் பட்டியலில் 74 வயது பாடலாசிரியர் ஜாவேட் அக்தர், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, சமீர், அபேந்திர குமார் உபாத்யாய், சர்தாரா, பாரி ஜி மற்றும் லவ்ராஜ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் ஜாவேத் அக்தர் தான் அந்தப் படத்துக்கு எந்த ஒரு பாடலையும் எழுதாத போது எதற்காக நன்றி என்று அதிர்ச்சி வெளியிட்டதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறும்போது, “1947:எர்த் என்ற படத்தில் வரும் ஈஸ்வர அல்லா பாடலை இந்தப் படத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டோம். மேலும் ’சுனோ கவுர் சே துனியா வாலன்’ என்ற பாடலையும் பயன்படுத்திக் கொண்டோம். அதற்காக முறையே ஜாவேத் அக்தர் மற்றும் சமீருக்கு நன்றி தெரிவித்திருந்தோம்.” என்று விளக்கம் அளித்தார்.
நேற்று (வெள்ளி) ஜாவேத் அக்தர் தன் ட்வீட்டில், “இந்தப் படத்தின் போஸ்டரில் என் பெயரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன், காரணம் நான் எந்த ஒரு பாடலையும் இந்தப் படத்துக்காக எழுதவில்லை.
இவரது இந்த போஸ்ட் இவரது மனைவி, நடிகை ஷப்னா ஆஸ்மி, மகன் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரால் பகிரப்பட்டிருந்தது.
ஓமங் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ படத்தின் நாயகன் விவேக் ஓபராய். இந்தப் படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது.