இந்தியா

உ.பி.யில் பாஜக ஆட்சியில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை: யோகி ஆதித்யநாத்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் எந்தக் கலவரமும் ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறும்போது, ''பாஜக தலைமையிலான அரசு  உத்தரப் பிரதேசம் மீதான முன் அனுமானங்களை மாற்றி இருக்கிறது.

பாஜக அரசின் ஆட்சிக் காலத்தில் இதுவரை உத்தரப் பிரதேசத்தில் கலவரம் ஏதும் நடக்கவில்லை. குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியாவில்  நிலவும் பாதுகாப்பான சூழ்நிலை  உலகின் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT