மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்த தேர்தலில் பொய்களுக்கு எதிராக போரிடுகிறோம். இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசுவது போன்ற வீடியோவையும் காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.