இந்தியா

சமூக வலைதளத்தில் மோடிக்கு கொலை மிரட்டல்: ஜெய்பூரில் இளைஞர் கைது

ஏஎன்ஐ

சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் ஜெய்பூரில் இன்று (வியாழக் கிழமை )கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்த விவரம்:

நவீன் என அடையாளம் காணப்பட்ட அந்தக் குற்றவாளி, சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பிரதமரை கொல்ல விரும்புவதாக கருத்து வெளியிட்டிருந்தார், அதற்குத் தேவையான பணமும் முழு திட்டமும் கைவசம் உள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

சமூக வலைத்தள தகவலும் அதற்கான சான்றுகளும் போலீஸாருக்குக் கிடைத்ததை யொட்டி, நவீன் தேடப்பட்டு வந்தார். தற்போது அவரை ஜெய்ப்பூர் நகர சைபர்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டதன் நோக்கம் குறித்தும் அவரது பின்புலம் குறித்தும் ஆராய்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் தற்போது போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT