இந்தியா

சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

செய்திப்பிரிவு

சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்த் 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஹரியாணா மாநிலம் பானிபட் அருகில் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுதொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த சிறப்பு நீதிபதி, இந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான் மற்றும் ராஜிந்தர் சவுத்ரி உள்ளிட்ட 4 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT