குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வன்முறைக் கும்பல் தீ வைத் தது. இதில் 59 கரசேவகர்கள் தீயில் கருகி இறந்தனர்.இந்த வழக்கில் ஏற்கெனவே 33 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த யாகுப் படாலியா என்பவரை கோத்ரா போலீஸார் கைது செய்த னர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தைத் தொடர்ந்து யாகுப் படாலி யாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.சி. வோரா நேற்று தீர்ப்பளித்தார்.