இந்தியா

அதிமுக எம்.பி.வேணுகோபாலுக்கு நாடாளுமன்ற கிராமப்புற மேம்பாட்டு நிலைக்குழு தலைவர் பதவி: கடைக்கோடி மக்களை சென்றடைய வாய்ப்பு

ஆர்.ஷபிமுன்னா

நாட்டின் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற கிராமப்புற மேம்பாட்டு நிலைக் குழுவின் தலைவர் பதவி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற மக்கள வையின் சார்பில் செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டது.

புதிதாக அமைந்த மக்களவை யில், எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கான தலைவர் பதவிகள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் இருஅவைகளிலும் சேர்த்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு 11 நிலைக் குழுக்களின் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, 113 உறுப்பினர் களைக் கொண்ட காங்கிரஸுக்கு ஐந்து குழுக்களுக்கான தலைவர் பதவியும், 46 எம்பிக்களைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸுக்கு இரண்டு நிலைக் குழுக்க ளின் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திரிணமூல் காங்கிரஸைவிட இரண்டு எம்பிக்கள் கூடுதலாக (48) இருந்தபோதும் அதிமுகவுக்கு ஒரே ஒரு நிலைக்குழுவின் (கிராமப்புற மேம்பாடு) தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதி எம்.பி.யான டாக்டர் பி.வேணுகோபாலுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரைக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும், அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலைக்குழு, அரசியல் ரீதியாக அக் கட்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து, ‘தி இந்து’விடம் மக்களவை அலுவலக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “மற்ற துறைகளோடு ஒப்பிடும் போது ஊரக மற்றும் கிராம வளர்ச்சித்துறை அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் அதிக திட்டங்களைக் கொண்டதாக விளங்குகிறது. எனவே, அவைகளை கண்காணிக் கும் வகையில் நாட்டின் கடைக் கோடி கிராமப்புற மக்களையும் சென்றடைய வாய்ப்பு அதிமுக வுக்கு கிடைக்கும். இதை வைத்து தமிழக மக்கள் அனைவருக்கும் அதிமுக சேவை செய்ய முடியும்” என தெரிவித்தனர்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டசபை தேர்தலை நடைபெற உள்ள நிலையில், இந்தத் துறையை அதிமுக கேட்டுப் பெற்றுள்ளதாகவும் கூறப்ப டுகிறது. இந்த நிலைக்குழுக்களில் பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களாக நாடாளுமன்ற இருஅவைகளின் உறுப்பினர்களும் ஏதாவது ஒரு குழுவில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

இந்தக் குழுக்களின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை உள்ளது. அதன்பிறகு அனைத்து நிலைக்குழுக்களும் மாற்றி அமைக் கப்படும். அப்போது உறுப்பின ராக உள்ளவர்கள் வேறு நிலைக்குழுக் களுக்கு மாறிக் கொள்ளலாம். ஆனால், அதன் தலைவர்கள் மட்டும் ஆட்சிக் காலம் (ஐந்து ஆண்டு) முடியும் வரை அதே குழுவில் நீடிக்க வேண்டும்.

உறுப்பினராக மன்மோகன் சிங்

நம் நாட்டின் நிதிகொள்கை களில் சீர்திருத்தம் கொண்டு வந்தவராகக் கருதப்படுபவரும் கடந்த ஆட்சியின்போது பிரதமராக இருந்தவருமான மன்மோகன் சிங், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிதித்துறைக்கான நிலைக்குழுவில் வெறும் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். இவரது அமைச்சரவை யில் மூத்த உறுப்பினராக இருந்த வீரப்ப மொய்லி நிதிக்குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார். காங்கிரஸின் மற்ற முக்கியத் தலை வர்களான திக்விஜய் சிங் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் இதன் உறுப்பினர் களாக உள்ளனர்.

இதே குழுவில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் மகனும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவருமான ஜெயந்த் சின்ஹா, நாட்டின் சிறந்த நிதி ஆலோச கராகக் கருதப்படும் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரும் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.

இளம் தலைவரின் தலைமையில் அத்வானி

ஆளும் பாஜக வசமுள்ள தொலைத்தொடர்புத்துறை நிலைக்குழுவின் தலைவராக அதன் இளம் எம்பியான அனுராக் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாலிவுட் நட்சத்திரங்களான ஹேமமாலினி மற்றும் பரேஷ் ராவல், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT