இந்தியா

ஹரியாணாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 2 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

செய்திப்பிரிவு

ஹரியாணாவின் ஹிசார் மாவட்டத்தில் பால்சாமண்ட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனது தோட்டத்தில் 60 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டினார்.

கடந்த புதன்கிழமை மாலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தை நதீம் கான் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர். ராணுவம், வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். மருத்துவர்கள் குழுவும் வரவழைக்கப்பட்டது.

குழந்தை சிரமமின்றி சுவாசிப்பதற்காக ஆழ்துளைக் கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. முதலில் வலை உதவியுடன் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக சுரங்கம் தோண்டப் பட்டது. பொக்லைன் இயந் திரங்கள், துளையிடும் இயந் திரங்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன் சுரங்கம் வேகமாக தோண்டப்பட்டது.

இரவிலும் கண்காணிக்க உதவும் கேமரா மூலம் இரவும் பகலும் குழந்தை யின் அசைவுகள் கண்காணிக் கப்பட்டன. கடந்த புதன், வியாழக்கிழமை இரவுகளில் குழந்தை நன்றாகத் தூங்கியது. பிஸ்கட், பழச்சாறுகள் ஆழ் துளைக் கிணற்றில் மெதுவாக இறக்கப்பட்டன. அதை உண்டு குழந்தை பசியாறியது.

கடந்த வெள்ளிக்கிழமை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சுரங்கம் வழியாகச் சென்று ஆழ் துளைக் கிணற்றில் சிக்கி யிருந்த குழந்தையைப் பத்திர மாக மீட்டனர். அங்கு முகாமிட் டிருந்த மருத்துவர்கள் குழந் தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அக் ரோஹாவில் உள்ள மருத்துவ மனையில் குழந்தையை சேர்த்தனர். தற்போது குழந்தை யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT