நியூஸிலாந்தில் நடைபெற்ற தாக்குதலில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் எந்தவித காயம் இன்றி தப்பினர். தாக்குதல் நடத்தியவனின் இலக்கு கிரிக்கெட் வீரர்கள் இல்லை எனினும் கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்கள் மீதும் நேரடியாகவே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் விவரம்:
* ஜெர்மனியின் முனிச் நகரில் 1972-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது செப்படம்பர் 5-ம் தேதி 11 இஸ் ரேல் தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சுமார் 16 மணி நேரம் தீவிர வாதிகள் துப்பாக்கி முனையில் பிணயக் கைதிகளாக பிடித்து வைத் தனர். இதன் பின்னர் அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன் றனர்.
* 1987-ம் ஆண்டு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த அணி வீரர்கள் கொழும்பு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்த ஓட்டல் அருகே பல்வேறு இடங் களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 113 பேர் இறந்தனர். இதையடுத்து நியூஸிலாந்து அணி உடனடியாக தொடரை ரத்து செய்துவிட்டு தாயகம் திரும் பியது.
* 2002-ம் ஆண்டு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடியது. அப்போது நியூஸிலாந்து அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடித்ததில் 12 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்படாத நிலையி லும் நியூஸிலாந்து அணி தொடரை ரத்து செய்துவிட்டு உடனடியாக சொந்த நாடு திரும்பியது.
* 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடியது. அப்போது லாகூரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்கு இலங்கை அணி வீரர்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது தீவிரவாதிகள் வழிமறித்து சர மாரியாக சுட்டனர். இதில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். பஸ் டிரைவர், 6 போலீஸார், பொதுமக்கள் இருவர் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகுதான் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுதவதற்கு எந்த அணிகளும் முன்வருவதில்லை.
* 2010-ம் ஆண்டு டோகோ தேசிய கால்பந்து அணி ஆப்பிரிக்க தேசிய கோப்பையில் பங்கேற்பதற்காக பஸ்ஸில் அங்கோலன் மாகாணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸை இடைமறித்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் டோகோ கால்பந்து அணியின் துணை பயிற்சியாளர் மற்றும் அணியின் ஊடக அதிகாரி ஆகியோர் இறந்தனர்.
* 2019-ம் ஆண்டு வங்கதேச கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்குவதாக இருந் தது. இதையொட்டி மைதானம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்தனர். நேற்று வெள்ளிக் கிழமை என்பதால் ஓட்டல் அருகே உள்ள மசூதிக்கு வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தொழுகை நடத்த சென்றனர். அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 49 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் எந்தவித காயம் இன்றி தப்பினர். எனினும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப் பட்டுள்ளது.