மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடியையும், அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸையும் புகழ்ந்த மாநிலச் செயலாளர் நரசையா ஆதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் சோலப்பூரில் பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 30 ஆயிரம் வீடுகளை கட்டும் திட்டத்துக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடியும், அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸூம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதுகுறித்து பொது நிகழ்ச்சியில் பேசி அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நரசையா ஆதம், இந்த பகுதியில் வீடில்லாதோருக்கு வீடுகட்டும் திட்டம் 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் அதற்கு வேகமாக ஒப்புதல் அளித்து தேவேந்திர பட்னவிஸூம், பிரதமர் மோடியும் செயல்படுத்தியாக புகழ்ந்த பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஆதம் அக்கட்சியின் மத்தியக்குழுவில் இருந்து 3 மாதங்களுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகளை முன்னிறுத்தி ஆதம் பேசியதாகவும், அரசியல் ரீதியாக பேசவில்லை எனவும் அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.