அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 223 தொகுதி வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
172 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக கடந்த வெள்ளியன்று வெளியிட்டது. இதில் தற்போதைய 32 எம்.எல்.ஏ.க்கள் பெயரும் அடங்கும்.
இன்று மேலும் 51 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைகிறது.
பாஜக மாநிலத் தலைவர் ஃபட்னாவிஸ், முதல்வர் வேட்பாளர் என்று கருதப்படுகிறார். இவர் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
மொத்தம் 223 வேட்பாளர்களில் 16 வேட்பாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.