இந்தியா

பட்ஜெட்: சமூக வலைதளங்கள் வழியே மக்களிடம் கருத்து கேட்கும் அசாம் அரசு

ஐஏஎன்எஸ்

அசாம் அரசு பட்ஜெட் 2019 தாக்கலுக்காக பட்ஜெட்டில் என்னென்ன சேர்க்கலாம்... மக்கள் விரும்புவது என்ன என்பதை அறிந்துகொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் இன்று (திங்கள் கிழமை) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ள விவரம்:

வரும் புதன் அன்று அசாம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்ற உள்ளது. இதற்கு முன்பாக மக்களின் கருத்தையும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பினோம். இன்று பயனுள்ள தொடர்புசாதனமாக விளங்கும் சமூக வலைதங்களில் பொதுமக்களை ஈடுபடச் செய்து வரவிருக்கும் பட்ஜெட்டில் அவர்களின் கருத்துக்களை தெரிந்துகொண்டு அவற்றை பட்ஜெட்டில் இணைத்து வருகிறோம்.

மோடி ஆட்சியின் கொள்கைகளை கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சமூக வலைதளங்களின் மக்களின் கருத்துக்களை கேட்பது என்பது, வழக்கம்போன்ற பாரம்பரிய வழிமுறைகளுடன் இந்தமுறை கூடுதலாக அமையும்.

பட்ஜெட்டில் சமூக வலைதளங்களில் மக்களை பங்கேற்க வைத்து பட்ஜெட்டில் அதையும் சேர்ப்பது நாட்டிலேயே முதல்தடவையாக ஒரு சோதனை முயற்சி. எனினும் அது மிகமிக பயனுள்ளதாக அமையும்.

கடந்த 11 நாட்களில் ட்வீட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வாயிலாக 200 பதிவுகளை வெளியிட்டோம். அது 1. 6 லட்சம் மக்களை சென்றடைந்துள்ளது.இதன்மூலம் எங்களுக்கு நிறைய பின்னூட்டகருத்துக்கள் குவிந்துள்ளன.

இதற்கான உரிய செயலியையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். இந்த செயலிகளுக்கு ''அசாம் பட்ஜெட்'' என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்களில் கிடைக்கின்றன. இது டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுக்கும் ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும்.

நாங்கள் குடிமக்களை எப்போதும் தொடர்பில் வைத்துக்கொள்ளவும் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்களை சேகரிப்பதையும் மேலும் தொடர திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT