இந்தியா

புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை இழிவு படுத்தும் விதமாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட ரயில்வே ஊழியர் கைது

செய்திப்பிரிவு

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

அவரது பெயர் உபேந்திர குமார் ஷிர்விர் பகதூர் சிங், இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த உபேந்திர குமார் பகதூர் சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார்.  இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.

ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

SCROLL FOR NEXT