இந்தியா

உ.பி.யில் 4,000 பேர் இந்து மதத்துக்கு திரும்பினர்: பஜ்ரங் தளம் அமைப்பு தகவல்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதம் மாறிய சுமார் 4 ஆயிரம் பேர் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளதாக பஜ்ரங் தளம் தெரிவித்துள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள உபியின் மேற்குப் பகுதி சுமார் 20 ஆண்டுகளாக மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்தது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த உயர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பொது இடங்களில் சம உரிமையும் கல்வியும் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழலிலிருந்து விடுதலை பெறும் பொருட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வால்மீகி எனும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிரிவான தரம் ஜாக்ரன் சமிதி ஈடுபட்டு வருகிறது. இவர்களுக்கு உதவியாக பஜ்ரங் தளம் உட்பட பல்வேறு இந்துத்துவா அமைப்பு களும் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பஜ்ரங் தளம் அமைப்பின் பிரிஜ் மண்டல் பகுதி தலைவர் அபிஷேக் குமார் ஆர்யா கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி க்கொண்ட சிலர், கல்வி, வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வசதிகளை செய்து தருவதாக ஆசை காட்டி அவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினர்.

அப்படி மதம் மாறியவர்களிடம் முன்பு இருந்தது போன்ற நிலை இப்போது இல்லை என்பதையும், மதம் மாறியபோதும் அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோ சனையின் மூலம் அவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றி வருகிறோம்.

இதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் நான்காயிரம் பேர் தங்கள் குடும்பத்தினருடன் இந்து மதத்துக்கு திரும்பி உள்ளனர். அதேநேரம் அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. சட்டம் மற்றும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அவர்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றி வருகி றோம் என அபிஷேக் தெரிவித்தார்.

கடந்த 1995-ம் ஆண்டு அலிகரின் இக்லாஸில் உள்ள அஸ்ரோய் கிராமத்தில் 23 குடும்பத்தைச் சேர்ந்த 71 வால்மீகி சமூகத்தினர், செவன்த் டே அட்வண்டிஸ்டாக மாறினர். இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இந்து மதத்துக்கு திரும்பினர்.

இவர்கள் பிரார்த்தனைக்காக பயன்படுத்தி வந்த ஒரு தேவலா யத்தை கோயிலாக மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் தேவால யங்கள் பள்ளிகளாக மாறி விட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் 25-ல் அலிகர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மதம் மாறிய 700 கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாறினர்.

மேலும் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு ஹாத்தரஸின் கேஷவ்பூரில் 1,500 பேரும், நான்கு வருடங்களுக்கு முன்பு அலிகருக்கு அருகில் சிக்கந்தரா ராவின் ஜிரோஹியில் 1,600 பேரும் இந்து மதத்துக்கு திரும்பி உள்ளனர்.

SCROLL FOR NEXT