ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கன்டமுல்லா ராணுவ முகாமில் ஆள்சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. புல்வாமா தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த முகாமில், காஷ்மீரின் வடக்கு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். கடும் குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்தகுதி சோதனைக்காக காத்திருந்தனர்.