ஆசிய விளையாட்டுப் போட்டியில், தங்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராய்க்கு, உத்தரப் பிரதேசம் முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.50 லட்சம் ரொக்கபரிசு அறிவித்துள்ளார்.
17-வது ஆசிய விளையாட்டு தென்கொரியாவில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய் பிஸ்டல் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
ஜிது ராய் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த வீரராவார். எனவே அவருக்கு உ.பி. முதல்வர் ரூ.50 லட்சம் ரொக்கபரிசு அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஜிது ராயின் கடின உழைப்பு, திறமை, அர்ப்பணிப்பு அவருக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் பெற்றுத் தந்துள்ளது.
அவரது சாதனை, இளைஞர்கள் நாட்டிற்காக கடினமாகவும் நேர்மையாகவும் உழைத்து தங்கள் இலக்குகளை அடைவதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என வாழ்த்து தெரிவித்து உள்ளார்.