குஜராத் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மணிநகர் தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் குஜராத் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து மணிநகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மணிநகர் தொகுதி உள்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.