இந்தியா

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு: மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து

செய்திப்பிரிவு

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்த ஜி ஜின்பிங், கொழும்பிலிருந்து அகமதாபாத் துக்கு நேற்று வந்தார். வெளிநாட் டைச் சேர்ந்த தலைவர் ஒருவர், தனது சுற்றுப்பயணத்தை அகமதா பாத்தில் இருந்து தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.

ஜி ஜின்பிங்கை, குஜராத் ஆளுநர் ஓ.பி.கோஹ்லி, முதல்வர் ஆனந்திபென் படேல் மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற் றனர். ஜி ஜின்பிங்குடன், அவரது மனைவி பெங் லியுவானும் வந்திருந்தார். இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சீன அதிபர், அங்குள்ள ஹயாத் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

மூன்று ஒப்பந்தங்கள்

ஜி ஜின்பிங் குஜராத் வந்த சில மணி நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

குஜராத்தில் தொழில் பூங்காக் களை தொடங்குவதற்கான ஒப்பந்தம், சீன மேம்பாட்டு வங்கிக்கும் குஜராத் மாநில அரசின் தொழிற்துறைக்கும் இடையே கையெழுத்தானது.

சமூக, கலாச்சார மேம்பாடு தொடர்பாக சீனாவின் குவாங்டாங் மாகாணத்துக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

சீனாவின் குவாங்ஸு நகரையும், அகமதாபாத்தையும் சகோதரி நகரங்களாக அறிவித்து வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பரஸ்பரம் கருத்துகளை பகிர்ந்து கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

சபர்மதி ஆசிரமம்

பின்னர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி அழைத்துச் சென்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்து மோடி விளக்கிக் கூறினார். பின்னர் சபர்மதி நதிக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை ஜி ஜின்பிங் பார்த்து ரசித்தார். அதைத் தொடர்ந்து ஜி ஜின்பிங்குக்கு நேற்று இரவு மோடி விருந்தளித்தார்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங் வியாழக்கிழமை டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். எல்லைப் பிரச்சினை, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் டெல்லியில் விரிவாக பேச்சு நடத்தவுள்ளனர். ரயில்வே, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் இரு நாடு களுக்கும் இடையே கையெழுத் தாக உள்ளன.

சீன அதிபரின் வருகையை யொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. ஜி ஜின்பிங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து திபெத்தி யர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக, சீன தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT