இந்தியா

சீன அதிபருடன் மன்மோகன் சிங், சோனியா காந்தி சந்திப்பு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த புதன்கிழமை இந்தியா வந்தார். அவருடன் அவரது மனைவி பெங் லியுவான் மற்றும் உயர்நிலைக் குழுவினரும் வந்திருந்தனர்.

இந்தப் பயணத்தின் 3-வது நாளான நேற்று, டெல்லியில் ஜி ஜின்பிங் தங்கியிருந்த தாஜ் பேலஸ் ஹோட்டலில் அவரை சோனியாவும் மன்மோகனும் சந்தித்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் கரண் சிங் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். தாஜ் ஹோட்டலில் நேற்று காலை 10 - 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக மக்களவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை நாடு திரும்பினார்.

திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

சீன அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக திபெத்தியர்கள் நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்கள் தேசியக்கொடியை ஏந்தி யிருந்த இவர்கள், திபெத்துக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும் சீன அதிபர் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலை நோக்கிச் செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, 3 பெண்கள் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர்.

இதுதவிர டெல்லியில் திபெத்தி யர்கள் காலனியிலும் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சீன அதிப ருக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில் டெல்லியில் பல் வேறு இடங்களில் போலீஸார் நிறுத் தப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT