ஆந்திர மாநிலத்தில் அரசு பணியில் சேருவதற்கான வயது உச்ச வரம்பை 34-லிருந்து 40 ஆக உயர்த்தி நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அரசு பணியில் சேர வயது உச்சவரம்பு 34 ஆக இருந்தது. இதனை உயர்த்த வேண்டுமென வேலை கிடைக்காத இளைஞர்கள், நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆந்திர மாநில அரசு, வயது உச்ச வரம்பை 40 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து வயது தகுதியை இழந்துவிட்டதால் அரசு வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்த 34 முதல் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்க ளுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.