இந்தியா

சீன அதிபருக்கு எதிர்ப்பு: டெல்லியில் திபெத்தியர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியா வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி சானக்யபுரி பகுதியில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகே திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திபெத் கொடியை ஏந்தியவாறு, திபெத்துக்கு சுதந்திரம் கோரி கோஷங்களை எழுப்பினர். போலீஸார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்ட முயற்சித்த போராட்டக்காரர்களை தடுத்து போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT