கேரளாவுக்கு சென்ற ஆண்டு வெள்ள பாதிப்பில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்திய நிலையிலும்கூட முந்தைய ஆண்டைவிட அதிக அளவில் சுற்றுலா வருமானம் ஈட்டி தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ''கேரள மக்கள் தொகையில் பாதி அளவுக்கு கேரளாவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.
முந்தை ஆண்டுகளில் கிடைத்த சுற்றுலாத்துறை வருமானத்தை ஒப்பிடும்போது 2018ல் கிடைத்துள்ள வருவாய் சென்ற ஆண்டு பெருவெள்ள பாதிப்பில் கேரளா தத்தளித்த போதிலும் இந்த எண்ணிக்கை ஒரு வியத்தகு வளர்ச்சிதான்'' என்றார்.
இதுகுறித்து கேரளா சுற்றுலாத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:
2017ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2018ல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிறையவே கூடியுள்ளது. எப்படியெனில் 15.76 மில்லியன் முதல்ஆண்டில் என்றால் அடுத்த ஆண்டில் அதாவது கடந்த ஆண்டில் 16.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் அதுவும் மழைவெள்ளப் பிரச்சிகளுடைக்கிடையே 5.93 சதவீத கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.
கேரளாவில் உள்ள மொத்த சுற்றுலாத் தலங்களில், 1.09 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர், அவர்களால் கிடைத்த வருவாய் ரூ. 8,764.46 கோடியாக இருந்தது,
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 15.6 மில்லியனை தாண்டி ஒரு வெள்ளம்போல பாய்ந்து 6.35 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டு அமெரிக்கர்கள், பிரஞ்சு, ஜெர்மனியர்கள் மற்றும் சவுதி அரேபிய என பல்வேறு நாட்டினர் வருகை தந்தபோதிலும் மிகப்பெரிய அளவில் இங்கிலாந்திலிருந்து மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கேரளாவைச் சுற்றிப் பார்க்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.