இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் எச்.எல். தத்து

செய்திப்பிரிவு

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள எச்.எல். தத்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருக்கிறார். 64 வயதாகும் அவரது முழுப்பெயர் ஹண்ட்யாலா லட்சுமி நாராயணசாமி தத்து.

இவரது நியமனத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைய தலைமை நீதிபதி லோதா செப்டம்பர் 27-ம் தேதி ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் 42–வது தலைமை நீதிபதியாக தத்து பொறுப்பேற்க இருக்கிறார். 2015 டிசம்பர் வரை அவர் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார்.

SCROLL FOR NEXT