காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று திருப்பதிக்கு வர உள்ளார். இதுகுறித்து திருப்பதி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர் (காங்கிரஸ்) சிந்தா மோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரேணிகுண்டா விமான நிலையம் வரும் ராகுல்காந்தி, இந்திரா மைதானம் அருகே உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தாரகராமா விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிறகு அவர் திருமலையில் ஏழுமலையானை தரிசித்து விட்டு, இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்” என்றார்.