கேரளத்தில் 9 வயது பள்ளி மாண வியை பலாத்காரம் செய்த தாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் மாவட்டம், கோத்தமங்கலம் அருகே வடத்துபுரா என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் தேவதாஸ் (64) என்பவர் பாதிரியா ராக உள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் தேவாலய வளாகத்தினுள் பூப்பறிக்க வந்த சிறுமியை தனது குடியிருப்புக்கு அழைத் துச் சென்று பலாத்காரம் செய்தார்.
இதை வெளியில் கூறி னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதுடன், பின்னர் மீண்டும் பலமுறை தவறாக நடந்துகொண்டதாக கூறப்படு கிறது.
சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவரவே, அவரை பள்ளி நிர்வாகம் மனநல ஆலோ சனைக்கு அனுப்பி வைத்தது. அப்போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தை குழந்தை நல கமிட்டி அண்மை யில் பதிவு செய்தது. இந்நிலை யில் பாதிரியார் தேவதாஸ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.