இந்தியா

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ன?- அடையாளம் காணப்பட்ட உரிமையாளர் தலைமறைவு: என்.ஐ.ஏ

செய்திப்பிரிவு

40 ராணுவவீரர்களின் உயிரை அநியாயமாக பலி வாங்கிய காஷ்மீர், புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பின் பயங்கரவாதிப் பயன்படுத்திய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதன் உரிமையாளரையும்  கண்டுபிடித்தது தேசிய விசாரணை முகமை.

தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி வெடிபொருட்களுடன் வந்த வாகனம் வெடித்துச் சிதறியது, அதன் பாகங்களை எடுத்து ஒட்டி. தடயவியல் நிபுணர்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் அந்த வாகனம் என்ன என்பதை என்.ஐ.ஏ. அடையாளம் கண்டது.

மாருதி ஈக்கோ மினிவேன் ரக வாகனம் அது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த வாகனம் 2011-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் ஹெவன் காலனியில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு 7 கைகள் மாறியுள்ளது மாருதி ஈக்கோ வாகனம் கடைசியாக அனந்த்நாகில் உள்ள சாஜத் பட் என்பவர் கைக்கு இந்த வாகனம் வந்துள்ளது. பிப்ரவரி 23ம் தேதி இவரது வீட்டை ஜம்மு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிடச் சென்ற போது அவர் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்தது.

இவன் போலீஸார் கண்களில் சிலகாலமாகவே மண்ணைத் தூவி வந்ததாகவும் ஜெய்ஷ் அமைப்பில் இவன் சேர்ந்திருக்கலாம் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாஜத்தின் படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தோன்றியது என்றும் அதில் இவன் ஆயுதங்களுடன் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சாஜத் ஷோபியானில் உள்ள சிராஜ் உல் உலூம் மாணவர் என்று தெரிவதாக விசாரணை அமைப்பு கூறுகிறது.

SCROLL FOR NEXT