இந்தியா

ஜார்க்கண்டில் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குன்ட்டி - மேற்கு சிங்பும் மாவட்டங்களின் எல்லையில் ரோட்கட்டோலி என்ற கிராமம் உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கோப்ரா பிரிவினர் மற்றும் மாநில போலீஸாரை கொண்ட கூட்டுப்படைக்கும் நக் சலைட்களுக்கும் இடையே நேற்று காலையில் மோதல் ஏற்பட்டது.

இதில் 5 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். ஒரு நக்சலைட் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திலிருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு 303 ரக துப்பாக்கி மற்றும் 5 கைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட் டன. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட நக்சலைட்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - பிடிஐ

SCROLL FOR NEXT