இந்தியா

வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டும்: சந்திரபாபு கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடைபெறும் மோசடி குறித்து பல கட்சிகள் ஒருமித்த கருத்தினை கொண்டுள் ளன. இந்த இயந்திரங்களில் மோசடி செய்ய 100 சதவீதம் வாய்ப்புள்ளது.

எனவே, வாக்குச் சீட்டு முறை மூலம் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை, எதிர்வரும் நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT