இந்தியா

தேச வளர்ச்சிக்காக திறமைகளை பயன்படுத்துங்கள்: பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தங்கள் திறமைகளை முழு வீச்சில் பயன்படுத்தி பொறியியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை அளிக்குமாறு பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று விஞ்ஞானி எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்ததினம். அவரை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் 15-ம் தேதி, பொறியாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி: "தங்கள் திறமைகளை முழு வீச்சில் பயன்படுத்தி பொறியியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை அளிக்க வேண்டும்.

கடின உழைப்பு, ஆராய்ச்சிகள், புத்தாக்கம் மூலம் நமது பொறியாளர்கள் நாட்டை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்" என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT