இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடர்: அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் அழைப்பு

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி நிறைவடைகிறது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் மக்களவையை சுமுகமாக நடத்துவது தொடர் பாக வரும் 30-ம் தேதி அனைத் துக் கட்சி கூட்டத்துக்கு சபா நாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல மாநிலங் களவையை சுமுகமாக நடத்து வது தொடர்பாக வரும் 31-ம் தேதி காலை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அந்த அவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் மத்திய அரசு தரப்பி லும் அனைத்துக் கட்சி கூட்டத் துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT