இந்தியா

ரூ.6,900 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகள் பறிமுதல்: வருமான வரித்துறையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

பினாமி சொத்து பரிமாற்ற சட்டம், 2016-ன் கீழ் வருமான வரித்துறையினர் கடுமையான நட வடிக்கைகளை எடுத்து வருகின் றனர். இந்நிலையில் இதுவரை ரூ.6,900 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தத் தகவலை முன்னணி செய்தித்தாள்களில் பகிரங்கமாக விளம்பரம் மூலம் அந்தத் துறை வெளியிட்டுள்ளது. பினாமி சொத்து பரிமாற்றத்தில் ஈடுபடாதீர்கள். அது சட்டவிரோதம் மற்றும் தண்டனைக்குரியது என்றும் விளம்பரத்தில் வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

பினாமி சொத்துகள் வைத்திருந் தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை, பினாமி சொத்துகளின் மார்க்கெட் மதிப்பில் 25 சதவீத அபராதம் என பல விதிமுறைகளை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் முதல் வருமான வரித்துறையினர் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைக்காக பினாமி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பினாமி பரிமாற்றங்கள், பினாமி நபர்கள் மற்றும் பினாமி மூலம் பலன் பெறுவோரை விசாரணைக்கு உட்படுத்த முடி யும்.

SCROLL FOR NEXT