நக்ஸல்கள் மீதான என்கவுன்ட்டர் நடவடிக்கையின்போது தங்கள் சகாக்களுக்கு உதவி செய்யாத 17 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தஹக்வாடா பகுதியில் கட்டிடத் தொழிலாளர் களுக்குப் பாதுகாப்பாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது அவர்களுக்கும் நக்ஸல் களுக்கும் இடையே மோதல் வெடித்தது. தங்களின் சகாக்களுக்கு உதவி செய்யாததால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சிலர் உயிரிழக்க நேரிட்டது.
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட விசாரணையில் ஓர் உதவி ஆய்வாளர், இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மற்றும் 14 கான்ஸ்டபிள்கள் ஆகிய 17 பேர் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது.