காஷ்மீர் பள்ளத்தாக்கின் மச்சில் நிலை எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுபாட்டு பகுதியான மச்சில் அருகே 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து பேசிய ராணுவ உயர் அதிகாரி, ''எல்லையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனை அடுத்து அவர்கள் நமது வீரர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் கைப்பற்றபட்டுள்ளன.
இதனால் எல்லையில் சற்று பதற்றம் நிலவுகிறது" என்றார்.