தெற்கு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெஃப் ஷெர்மல் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலையில் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்கு பூமிக்கு அடியில் இருந்த பதுங்கு அறையும் அழிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் சாமுவேல் ஹக் என அடையாளம் காணப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் சகோதரரான இவர், தனது யுனானி மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்தார். இவரை தேசிய நீரோட்டத்தில் கொண்டுவரும் முயற்சி பலனளிக்காமல் போனதாக மூத்த போலீஸ் அதிகாரி எஸ்.பி. வைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 2-வது என்கவுன்ட்டர் இதுவாகும். பட்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த என்கவுன்ட்டரில் அல்-பதர் குழுவை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.