விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை கள் வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு குறைந்த கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை மத்திய வேளாண் அமைச்சகம் தயாரித்துள்ளது.
பயிர்க்கடனை குறித்த காலத் தில் செலுத்திய விவசாயிகளுக்கு வட்டி ரத்து செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.15,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் பயிர்க் காப்பீட்டுக்கான முழு தொகையையும் அரசே ஏற்பது, விவசாயிகளுக்கு நேரடி மானியம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன், இணையமைச்சர் பர்ஷோதம் ரூபாலா ஆகியோர் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயி களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசின் சிறப்பு சலுகைகளால் நாடு முழுவதும் சுமார் 21.6 கோடி குறு, சிறு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.