இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு புகார்: தேர்தல் ஆணையம் திட்டவட்ட மறுப்பு

செய்திப்பிரிவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா கூறியிருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும், 2014-ம் ஆண்டு தேர்தலில் முறைகேடு செய்யப்பட்டது.  டெல்லி தவிர பல தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.

இந்த புகாரை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இதில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை. இதுபோன்ற அவதூறு கிளப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள உள்ளோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT