‘ஒரு ரூபாய் நோட்டு’ அச்சடித்து, வெளியிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்று மத்திய சட்ட அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஏற் கெனவே, அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. ரூ.2, 5, 10, 20, 50, 100, 500, 1,000, 5,000, 10,000 நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
அனைத்து நாணயங்களையும் தயாரித்து வெளியிடும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. நாணயங்கள் வெளியீடு குறித்த அவசர சட்டம் பிரிவு 2-ன் படி, ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்திருந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி மத்திய சட்டத்துறைக்கு உத்தர விடப்பட்டிருந்தது.
சட்டத்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு அச்சிடுவது குறித்து அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து ‘நாணயங்கள் சட்டம், 2011’ இயற்றப்பட்டது. இச்சட்டம் மத்திய அரசு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இச்சட்டப் பிரிவு 4-ன் படி, ரூ.1,000 வரை நாணயங் களை தயாரித்து வெளியிட மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. நாண யத்தை தயாரிப்பதற்கான உலோகம் அல்லது மத்திய அரசின் முத்திரையிடப்பட்ட வேறு பொருளை முடிவு செய்யும் அதி காரம் மத்திய அரசுக்கு உண்டு. நினைவு நாணயங்கள் வெளியிடும் உரிமையும் இதில் அடங்கும்.
நாணயங்கள் குறித்த அவசர சட்டம் 1940-ஐ வாபஸ் பெற்று, நாணயங்கள் சட்டம் 2011 இயற்றப் பட்ட போதே, ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு, வெளியிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட் டுள்ளது.
நாணயத்தின் வடிவம், அளவு, உலோகம் ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட் டுள்ளது. இவ்வாறு மத்திய சட்டத் துறை விளக்கம் அளித்துள்ளது