பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரபிரதேச ஷியா வக்ப் வாரிய தலைவர் வாசீம் ரிஸ்வி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐஎஸ் என்பது மிகவும் அபாயகரமான தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தங்களது செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, தங்களது அமைப்பின் கொள்கைகளை மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிக்க முயற்சி செய்து வருகிறது.
காஷ்மீரில் ஐஎஸ் அமைப்பினரின் செல்வாக்கை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவே, முஸ்லிம் குழந்தைகளுக்காக நடத்தப்படும் அனைத்து மதரஸாக்களையும் மூடவும் அவர்களை பள்ளிக்கு அனுப்பவும் உத்தரவிட வேண்டும். அப்படி மூடாவிட்டால், நம் நாட்டில் ஐஎஸ் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிக்கும். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அவர்கள் விரும்பினால் மத ரீதியான படிப்பை படிக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஒரு தரப்பினரின் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு ரிஸ்வி ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.