கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் சுமார் 20 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலக அளவில் இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் நிலை குறித்து ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலக அளவில் மோசமான இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை அடுத்து, இந்தியாவில்தான் அதிகப்படியான மக்கள் இடம்பெயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் சுமார் 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து, தங்கள் நாட்டிலேயே பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், உலக அளவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் 2 கோடியே 20 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.