இந்தியா

மும்பை தாக்குதலில் உயிர்நீத்த ஹேமந்த் கர்கரேவின் மனைவி காலமானார்

செய்திப்பிரிவு

மகாராஷ்ட்ராவில் தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா (56) உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோமா நிலையில் இருந்த கவிதா கர்கரே இன்று காலை மும்பை மருத்துமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும், அவரது உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாகவும் அவரது மகள்கள் தெரிவித்தனர். மறைந்த கவிதா கர்கரே கல்லூரி பேராசிரியையாக பணியாற்றினார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றபோது, தீவிரவாதிகளுடனான நேருக்கு நேர் சண்டையில், தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவராக பணியாற்றிய ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர் ஆகிய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து விசாரணை துவங்கிய சமயத்தில், தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கு வழங்க வேண்டிய குண்டு துளைக்காத உடைகள் வழங்கப்படாததே காரணம் என்றும், நாட்டை காப்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT