அமெரிக்காவிலுள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த 37 வயதான துளசி கப்பார்ட், 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிட வுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இண்டியானாவில் பிறந்த துளசி தனது பதின்ம வயதில் இந்து மதத்தை தனது மதமாக தேர்வு செய்தார். 21 வயதில் செனட் உறுப்பினரானார். 2012-ம் ஆண்டில் துளசி. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முதல் இந்து பிரதிநிதியாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக் காவிலுள்ள பத்திரிகையில் துளசி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் நான் இருக்கிறேன் என்றதும் இந்து பெயர் வைத்துள்ள என்னையும், எனது ஆதரவாளர் களையும் சில ஊடகங்கள் குறிவைத்து எழுதுகின்றனர். இன்று நான் இந்து அமெரிக்கனாக தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளேன். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முஸ்லிம் அமெரிக்கன் அல்லது யூத அமெரிக்கர்கள் தேர்தலில் போட்டியிடலாம். அப்போதும் இப்படித்தான் அந்த ஊடகங்கள் குறிவைத்துத் தாக்குமா?
அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் உள்ள முதலாவது இந்து-அமெரிக்கனும் நானே. எனவே அதிபர் பதவிக்கு போட்டி என்ற அறிவிப்பை பத்திரி கைகள், முதலாவது இந்து- அமெரிக்கன் என்று கூறியிருக்க லாம். மத வெறுப்புகளைத் தவிர்த் திருக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.